Date:

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் நிபுணர் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதிக்கு

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

உரிய தரத்துடன் கூடிய எரிவாயுவை விநியோகிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நீண்டகால மற்றும் குறுகிய கால யோசனைகள், எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் முன்வைக்கப்படும் என அதன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்தமையை அடுத்து, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த நவம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

மொரட்டுவை பல்கலைகழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னாக்கோன், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் டப்ளியூ. டீ. டப்ளியூ. ஜயதிலக ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த குழுவினால், எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அதன் களஞ்சியசாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் உணவின்றி 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு...

ரணிலின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில்...

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...