மூன்று மாத கைக்குழந்தையை 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து அந்த நிதியில் போதைப்பொருள் பயன்படுத்திய தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குருநாகலில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தில் உள்ள தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணின் பையில் சிறிய குழந்தையொன்றின் ஆடை இருந்துள்ளது. அதனை தொடர்க்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
குழந்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் 30,000 ரூபாவுக்கு பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.