இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிகளவிலான ஜோர்ஜிய நாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கஸக்ஸ்தான் மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகள் கூட்டு மேம்படுத்தல் திட்டத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.