யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக அமைச்சர்கள் மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான பிரணாமப் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (17) அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகிய மூவரும் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அண்மையில் கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.