பொகவந்தலாவ- எல்பட தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு அருகிலுள்ள மரத்திலிருந்த குளவி கூட்டின் மீது, கழுகு மோதியதால் குளவிகள் கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளன.
இதனையடுத்து, மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பட்டதோடு, ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஏ.சத்தியேந்திராவின் பணிப்புரைக்கு அமைய, இன்றைய தினம் பாடசாலை மூடப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் என்.தியாகராஜன் தெரிவித்தார்.