நாட்டில் மேலும் 1,783 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் கடந்த 11 ஆம் திகதி வரையில் பிந்தி கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையிலான நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 575,432 ஆக உயர்வடைந்துள்ளது.