இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டு வந்த சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து இவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்த முதலீட்டு சபையின் பணிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஜனாதிபதி அவர்களை தொடர்ந்தும் பதவியில் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
எனினும், கடந்த வாரம் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் சஞ்சய் மொஹொட்டாலே தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.