கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பிரித்தானியாவில் கடந்த 27 ஆம் திகதி முதல் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.
அந்நாட்டில் அதிக வேகத்தில் ஒமிக்ரொன் திரிபு பரவி வருவதாகவும் அந்நாட்டு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.