இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் பதவிக்காக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் ஒரு வருடத்திற்கு அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


                                    




