ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கட்சியின் தீர்மானத்தை மீறி 2022 பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக, உடன் அமுலாகும் வகையில் தௌபீக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.