ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி, பிரஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. லாரா தத்தா கடைசியாக 2001 -ம் ஆண்டு Miss Universe பட்டம் வென்றார். அதன்பிறகு, கடந்த 20 வருடங்களாக எந்த இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றிருக்கிறார். இவருக்கு வயது 21 பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இஸ்ரேலின் எய்லட்டில் நடைபெற்ற இந்த அழகிப்போட்டியில் 80 பேர் கலந்து கொண்டனர் . இறுதியில் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றிருக்கிறார்.