வாகன விற்பனையில் ஏற்கனவே கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகனங்களை கொள்வனவு செய்வதில் மக்களிடையே ஆற்றல் குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.கே.கமகே தெரிவித்தார்.
இதேவேளை, 2022ஆம் வருடம் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதியமைச்சர் நேற்று (09) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


                                    




