பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சேர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில், 36 பயணிகள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏராளமானோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
