Date:

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் மீட்பு!(photos)

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ் பிரிவில் இன்று  காலை குறித்த சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை பகுதிக்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக நாடு பூராகவும் உள்ள கடற்கரைப்பகுதிகளில் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் கரையொதிங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...

அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு...

சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான்,...