இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் பிரச்சினை தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலிண்டர்களின் உள்ளடக்கங்கள் வௌிப்படுத்துமாறு குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.