ஹட்டன் ரோசல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து ரோசல்ல ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், பிள்ளையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், புகையிரத கடவையை கடக்க முயன்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
-செ.திவாகரன்-