திருகோணமலை – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து அனர்த்ததிற்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மிதப்பு பால உரிமையாளர் உட்பட 3 பேரும் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் திருகோணமலை நீதிவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (08) பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த மூன்று பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறிஞ்சாக்கேணி மிதப்பு பால அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிண்ணியா நகர சபை தவிசாளர் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.