சுவிட்சர்லாந்தில் “ வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும், வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
“சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று, அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் “சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் இந்த இயந்திரம் செயற்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
மரணம் எப்படி ஏற்படுகிறது
உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைப்பதன் மூலம் உயிர் பிரியும். அதாவது இந்த காப்சியூல் வெறும் 30 நொடிகளில் உள்ளே இருப்பவர் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது. அதன் பின்னர் உள்ளே இருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்றுவிடுவர். அடுத்த 5ஆவது நிமிடத்தில் உள்ளே இருப்பவரின் உயிர் பிரியும் என காப்சியூலை உற்பத்தி செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.