Date:

‘ஒமிக்ரோன்’ வைரஸ் குறித்து வௌியான செய்தி!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.

இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மஹாராஷ்ட்ரா – 10, குஜராத் – 1, டெல்லி – 1, ராஜஸ்தான் – 9 என இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொற்று தொடர்பாக தென்னாப்பிரிக்க ஆராய்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ஒமிக்ரோன் தொற்று எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உயிரிழப்பு எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிலைமை மாறலாம்” என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...