Date:

பிரியந்த விவகாரம்! – கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முற்றுகை

கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் படு​கொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியந்தவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

பிரியந்த குமாரவின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் நீதி கோரியுள்ள நிலையிலேயே, கொழும்பில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று மாலை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானத்தில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பூதவுடல் கொண்ட பெட்டி இலங்கை தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப் பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் தகவல் அமைச்சர் ஃபவாட் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...