Date:

அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்

2021 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 24,100 க்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இதனால் சுமார் 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

குருணாகல், கண்டி, பூஜாபிட்டிய, யட்டிநுவர, கம்பஹா, கட்டான, சீதுவ, ராகம, வத்தளை, நீர்கொழும்பு, மஹர, களனி, ஜா-எல, அத்தனகல்ல/வெயங்கொட, பியகம, கொழும்பு, மஹரகம, கொதடுவ, ஹோமாகம, இரத்மலானை, பத்தரமுல்ல, பிடமலை, பீட்டகொத்ததேமுல்ல தெஹிவளை, பொரலஸ்கமுவ, நுகேகொட, கொலன்னாவ, மொரட்டுவ, கடுவெல, பிலியந்தலை மற்றும் பதுளை சுகாதார பணிமானை பகுதிகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டெங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் பொது மக்கள் எப்போதும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் உங்கள் இடங்களை சுத்தம் செய்து கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்கவும்.

டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
  • கடுமையான தாகம்
  • நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்
  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
  • தலைசுற்றுதல்
  • கைகால்கள் குளிரடைதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

மோசடி வௌிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக 567 வழக்குகள் தாக்கல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த...

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...