எரிவாயு கொள்கலன் தொடர்பான தீ அல்லது வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு இன்று முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முனையத்தை ஆய்வு செய்யவுள்ளது.
கொட்டாவ, அதுருகிரிய, ஹங்வெல்ல மற்றும் பாதுக்க பிரதேசங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகிய பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு காவல்துறையினருடன் சென்று நேற்றைய தினம் குறித்த குழுவின் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
இந்த நிபுணர் குழு, உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு பரிந்துரைகளை வழங்கியது.