அனுமதிக்கப்பட்ட எரிபொருட்கள் தவிர்ந்த வேறு வகையிலான எரிபொருட்ளைப் பயன்படுத்தும் பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக அனுமதியளிக்கப்படாத வேறு எரிபொருட்களை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன வெளியிட்ட கருத்து மற்றும் காவல்துறைமா அதிபரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு என்பன தொடர்பில் பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.