Date:

நிரபராதியாகக் கருதி அசாத் சாலி விடுதலை!

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றமற்றவராகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இன, மத சீர்குலைவை ஏற்படுத்தும், வன்மத்தை தூண்டும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாகக் கூறி, பயங்கரவாத தடுப்புச் சடத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்க செய்யப்பட்ட வழக்கின் மனுதாரர் தரப்பு விசாரணைகள் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி நிறைவடைந்திருந்தன.

இந்நிலையில், இவ்வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான அசாத் சாலியை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...