Date:

வாகனங்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே வாகனங்களின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த வருடத்தில் நான்காவது தடவையாக வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை மாருதி சுஸுகி மற்றும் மஹேந்திரா நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே, வாகன விலை உயர்வு, சந்தையில் வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வீஜய் நக்ரா தெரிவித்துள்ளார்.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய லொறிகள் போன்ற பிரபலமான வாகனங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும்,...

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...