Date:

ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது!

1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1967 முதல் 54,000 க்கும் மேற்பட்ட நிர்வாக தடுப்பு உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய சிறைகளுக்குள் மொத்தம் 226 பாலஸ்தீன் கைதிகள் இறந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருமே ஒருவித உடல் அல்லது உளவியல் சித்திரவதை, துஷ்பிரயோகம் மற்றும் கொடூரமான துன்புறுத்தல் ஆகியவற்றை அனுபவித்ததாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம் – சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

பேருந்து கட்டணத்தில் திருத்த…

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும்...

ஆப்கான் நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்

நெடுஞ்சாலையில் செலுத்தப்படும் எந்தவொரு வாகனத்திலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று...