பொதுவாக சருமத்தில் தோன்றும் அம்மை வடுக்கள், தழும்புகள், காயங்கள், மோசமான முகப்பருக்கள் தழும்புகளை போன்றவை நம் முகத்தின் அழகையே சீர்குலைத்துவிடும்.
இதற்காக பலர் கண்ட கண்ட கிறீம்கள், செயற்கை பொருட்களே வாங்கிப்பயன்படுத்துகின்றார்.
இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. இதற்கு வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- முதலில் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யுங்கள். பிறகு 3 – 4 டீஸ்பூன் எலுமிச்சை சாறில் சிறு பஞ்சு உருண்டையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தம் செய்யவும். பிறகு வெளியில் செல்வதாக இருந்தால் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யவும்.
- 1 டீஸ்பூன் தேனையும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவையும் நன்றாக குழைக்கவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து அதன் மேல் போர்த்தி பிறகு சுத்தம் செய்யவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து சாறு எடுக்கவும். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். முகத்தில் அதிகமான காயங்களும் தழும்புகளும் இருந்தால் தினமும் 3 வேளை இதை செய்து வரலாம்.
- சோற்றுக்கற்றாழை மடல்களிலிருந்து ஜெல் போன்ற பகுதியை எடுக்கவும். கடைகளில் கற்றாழை ஜெல் கிடைக்கும். இதை வாங்கி மசாஜ் செய்யலாம். தேவையான இடத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை பயன்படுத்தலாம்.
- நெல்லிக்காய் பொடியை தேவைக்கு எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட் போல் குழைக்கவும். இதை முகத்தில் அல்லது உடலில் என பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். ஒவ்வொரு மாற்று நாளிலும் இதை பயன்படுத்தலாம்.
- உருளைக்கிழங்கு 2 டீஸ்பூன் துருவி அரைத்து அதன் சாறை எடுக்கவும். அதில் காட்டன் உருண்டையை நனைத்து ஊறவைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்து வரலாம்.