இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியமைக்கு, மின்சார சபை தலைமையகத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் தலைவரினால் குறித்த இரு ஊழியர்களும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், மின்சார சபையின் தலைமையகத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினரால் இந்த எதிரப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.