அஹச ஊடக நிறுவனத்தினால் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் நடிகர்கள் மற்றும் சமூக சேவையாளர்களைக் கௌரவிக்கும் டொப் 100 ஸ்ரீலங்கா எனும் விருது வழங்கள் நிகழ்வு (28ஆம் திகதி) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர டவர் மண்டப நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் அஹச ஊடக நிறுவனத்தின் தலைவி பிரியங்கா பண்டாரவும் கலந்து கொண்டனர்.
படத்தில் புரவலர் ஹாசீம் உமர் கலைஞர் ஜெயப்பிரகாஸ் ஷர்மாவுக்கு விருது வழங்குவதனையும் ஏனைய தமிழ் முஸ்லிம் கலைஞர்களான சுபாஷினி சரவேஸ்வரன் ஹேமா ஷமுகேஸ்வரன் மொஹமட் ரமீஸ் ஜெயகௌரி மற்றும் ஜனாபா நாஹித் மௌலானா ஆகிய கலைஞர்களையும் படத்தில் காணலாம்.