7 பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் இன்று எதிர்ப்பு வாகன பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
பட்டதாரி சுகாதார தொழிற்சங்கவியலாளர்களின் வேதன பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்காமை, தொழிற்சங்கவியலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து இந்த எதிர்ப்பு வாகன பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பில் இந்த எதிர்ப்பு வாகன பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்திய ஆய்வு கூட தொழிற்சங்கவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின் அடுத்த வாரம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.