எச்.ஐ.வீ (HIV) அவதானமிக்கவர்களுக்கு அதற்காக பயன்படுத்தப்படும் ஒளடதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டத்தின் தரவுகளுக்கமைய, நாட்டில் எச்.ஐ.வீ தொற்றாளர்கள் 3,700 பேர் உள்ளனர்.
எனினும், அவர்களில் 2,600 பேர் மாத்திரமே சிகிச்சை பெறுவதாக அந்த தரவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் பரவல் காரணமாக அந்த எண்ணிக்கை 363 ஆக குறைவடைந்துள்ளது.
அதற்கு தீர்வாக சுய எச்.ஐ.வீ பரிசோதனை கருவிகளை இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.