அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார்.
தஹாம் சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட இளைஞர் அதிகார சபையின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.
தஹாம் சிறிசேனவை தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வி சத்துரிகா சிறிசேனவும் கடந்த காலங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.