நுவரெலியாவிலுள்ள பிரதான சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் இன்று (29) காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை தொளஸ்பாகே வீதியில் வசிக்கும் ஹோட்டலின் முகாமையாளரான 47 வயதான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஹோட்டல் ஊழியர்கள் கடந்த 28 ஆம் திகதி விருந்து வைத்துள்ளனர் அதன் பின்னர் விருந்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் முகாமையாளரை அவர்கள் தங்கியிருந்த மற்றொரு விடுதியின் ஐந்தாவது மாடியிலுள்ள அவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இன்று(29) அதிகாலை 1.45 மணியளவில் குறித்த அறையின் ஜன்னலில் அமர்ந்திருந்த முகாமையாளர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த முகாமையாளரின் சடலம் நுவரெலியா நீதவான் பரிசோதனையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
-செ.திவாகரன்-