Date:

எம்.பி பதவி வெற்றிடம் அடுத்த இடம் யாருக்கு?

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாகியுள்ளதால் அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளதாக மஹிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு, இராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இவருக்கு பதிலாக ஆளும் தரப்பு, யாரை நாடாளுமன்றம் அனுப்பும் என்பது தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடல் சீற்றம்: முன்னெச்சரிக்கை…

கடல் சீற்றம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு காலி முதல்...

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...