திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட குறிஞ்சாக் கேணிப் பகுதியில் மாணவர்களுடன் பயணித்த படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. பிந்திய தகவல்களின் படி மாணவர்கள் 8 பேர், ஆசிரியை ஒருவர் மற்றும் முதியவர் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.