Date:

வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை

2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கமைவாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமானது. பாராளுமன்றத்தில் ஏழு நாட்களாக நடைபெறும் விவாதம் நாளை 22ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை மறுதினம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறும்.

வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவுசெலவுத்திட்டம் நடைபெறும் காலப்பகுதியில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக இவ்வருடம் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில்...