சிங்கள – தமிழ் புத்தாண்டுக் காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
தவறான ஆலோசனையுடன் இரவோடு இரவாக உரங்களைத் தடை செய்தமையால் எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சமொன்று ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பணத்தை அச்சிடுவதற்கான திட்டமிடப்படாத மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரத் தட்டுப்பாட்டால் நாட்டுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படாத நிலையில் டொலர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.