பேலியகொட மெனிங் சந்தையின் இன்றைய நிலை தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மெனிங் பொது வியாபாரிகளின் சங்கத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளா் அனில் இந்திரஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மெனிங் சந்தைக்கு இன்றைய தினம் மரக்கறிகள் கிடைத்திருந்தாலும் கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது மரக்கறிகளின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருள், உரப் பற்றாக்குறை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மரக்கறி விலையை போன்று ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமையில எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ,அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் தலையிட்டு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களுக்கான நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
