Date:

வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்குண்ட மூவரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக   ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு இரத்தினபுரி மாவட்டத்தில்  மூவர் காணாமல் போயுள்ளனர்

இதேவேளை  ரத்தினபுரி மாவட்டத்தில்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்  இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக  அனர்த்த முகாமைத்துவ பிரிவின்   பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்

இதனிடையே  அத்தனகலு ஓயா களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகிய வற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதனை அண்மித்துள்ள தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹொரனை அகலவத்தை  இங்கிரிய  பாலிந்த நுவர புளத்சிங்கள  தொடாங்கொட  மில்லனிய களுத்துறை  ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...