Date:

வட்ஸ்அப்பில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் ஏற்கனவே தொலைபேசி செயலியாகவும்,  வட்ஸ்அப் வெப்பாக கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும்,  வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால், கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வட்ஸ்அப் பீசி (WhatsApp PC) என்ற செயலியை உருவாக்க மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Windowsக்காக வட்ஸ்அப் பீட்டா ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், விரைவில் Windows மற்றும் MacOSக்காக மேம்படுத்தப்பட்ட வட்ஸ்அப் பிசி (WhatsApp PC) என்ற செயலி வெளியிடப்படவுள்ளதாக பிரபல இத்தாலிய இணையத்தளமான Aggiornamenti Lumia One வெளியிட்ட சில ஸ்கிரீன்ஷோட்கள் மற்றும் GIFகளை மேற்கோள்காட்டி GSMArena இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Windows 11 இன் theme ஆக உள்ள, transparent color panel உடன் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த செயலியில், பயன்பாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் notification கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலி மூலம் கணினிகளில் விரைவாக வட்ஸ்அப்பை செயற்படுத்த முடியும் எனவும், டச் டிஸ்பிளேக்கு ஏற்ற வகையில் வரைதல் அம்சம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த செயலியில் வட்ஸ்அப் கணக்கு, அரட்டைகள், Notifications உட்பட 6 பிரிவுகள் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வட்ஸ்அப் வெப்பில் காணப்பட்ட வரம்புகள் இந்தச் செயலியில் தவிர்க்கப்படும் என்றும், விரைவில் இது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking நாங்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கினோம் ,இனி பொருளாதார இலக்குகள் தாக்கப்படும்-ஈரான்

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ஈரானின் தாக்குதல்கள் தொடரும்: முதல் இரவில்,...

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

ஈரான் தாக்குதலில் இலங்கைப் பெண்கள் இருவர் காயம்

இஸ்ரேல் முழுவதும் ஈரானிய ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இதனால்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373