Date:

வீதியில் எண்ணெய்பவுஸரில் கசிவு ஏற்பட்டால் அரசை ஏசுவீர்களா? – துறைமுக அமைச்சர்

வீதியில் எண்ணெய்பவுஸர் ஒன்று விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தீப்பிடித்த கப்பல் மூலம் எண்ணெய்க்கசிவு வருமா ,கடல்வளம் பாதிக்குமா என்பது தொடர்பாக இன்று (03) அவசர ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எரிந்த கப்பல் மூலம் ஆபத்தென செய்தியாளர்களிடம் கூறும் கலாநிதி பெண்மணி கடந்த பொதுத் தேர்தலில் கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டார்.

இப்படி தவறான தகவல்களை கூறுவோருக்கு எதிராக சி.ஐ. டியூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.வீதியில் ஒரு எண்ணெய்பவுஸர் விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என்றார்.

குறித்த கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனம் அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை...

இலங்கை இளையோர் அணி அசத்தல் வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில்,...

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...