Date:

வீதி விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள்

நாளாந்தம் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக வீதி சட்டங்கள் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வீதி விபத்துகள் காரணமான 1,948 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர இதன்போது தெரிவித்துள்ளார்.

விரைவாக அபராதத்தைச் செலுத்துதல் மற்றும் சாரதிகளின் திறன் தொடர்பான மதிப்பெண் முறைமை உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நடவடிக்கைகளுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகளுக்கு இரண்டு வாரங்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தற்போது சுமார் 17 ஆயிரம் பேர் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளில் சாரதிகளாகப் பணியாற்றுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய...

ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம்...

Breaking:கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றநிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு...

ரணில் விளக்கமறியலில் அடைப்பு…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...