புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளை கோரியுள்ளது.