Date:

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Kottu) ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், இந்த புதிய விலை மாற்றம் செவ்வாய்க்கிழமை (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூறுகையில், சிற்றுண்டிகளின் (Short eats) விலைகள் 10 ரூபாவினாலும், ஒரு கோப்பை ‘பிளேன் டீ’ மற்றும் பால் தேநீரின் விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

உணவகங்கள் நடத்தப்படும் அனைத்து இடங்களிலும் மாதாந்த மின்சார  பயன்பாடு 180 அலகுகளை தாண்டுவதாகவும், இத்தகைய சூழலில் பாரிய மின்சார கட்டணத்தை சுமக்க வேண்டியுள்ளதால், இந்த தொழிலை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காகவே இவ்வாறான விலை அதிகரிப்பு தீர்மானத்தை எடுத்ததாக ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...