ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering) ஆகிய நிறுவனங்களின், தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட இராஜினாமா செய்துள்ளார்.
இவரது இராஜினாமா செவ்வாய்க்கிழமை (31) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், நிறுவனத்தின் பதில் தலைவராக டிமால் அந்தர (Dimal Anthara) செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ரொஷான் குணதிலக்கவும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன






