ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை உருவாகியுள்ளது.

ஈரான் நாட்டு மக்கள் தங்கள் தலைமைக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று டிரம்ப் விடுத்த அழைப்பு அங்கே பலிக்காத நிலையில், தற்போது நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் போராட்டக்களங்களாக மாறியுள்ளன.

“மன்னராட்சிக்கு இடமில்லை” (No Kings) என்ற முழக்கத்துடன் வீதிகளில் திரண்டுள்ள மில்லியன் கணக்கான மக்கள், தற்போதைய தீவிர வலதுசாரி அரசியல் மற்றும் அதிகாரப்போக்கிற்கு எதிராகத் தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பிரிவினைவாத அரசியலும் தீவிரவாத சித்தாந்தங்களும் ஒருபோதும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவராது என்பதற்கு இந்த உள்நாட்டு எதிர்ப்பே சாட்சியாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.








