மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை ரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நியூசிலாந்து மன்னிப்பு கோரியுள்ளது.
மார்ச் மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் இதில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.






