Date:

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும்.

இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு...