Date:

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார்.

“இன்று முதல் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு எமது சேவைக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. எமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் இல்லை, அதற்கு மேல் அரசாங்கம் விலைகளையும் அதிகரித்துள்ளது. ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது’ போன்ற நிலையே இது. முச்சக்கரவண்டி கட்டணத்தின் முதலாவது கிலோமீற்றருக்காக 20 ரூபாயை அதிகரிக்குமாறு நாங்கள் முன்மொழிகிறோம். மீற்றர்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும். நிலவும் நிலைமை குறித்துத் தெரிவிப்பதற்காக விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வரவுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி

ஹற்றன் நகருக்குத் தேவையான சமையல் எரிவாயு (Gas) போதுமான அளவு கிடைக்காத...

சினோபெக் , லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec)...

இன்று 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து...

அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி...