இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த போதிலும், இன்று கொலன்னாவை முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை கொலன்னாவை முனையத்திற்குச் சென்ற எரிபொருள் பவுசர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.






